பொதுவாக நாம் கரும்பு சாப்பிடுவது பொங்கல் பண்டிகையில் மட்டும்தான் .ஆனால் சாலையோரம் கரும்பு சாறாக கிடைக்கிறது .இந்த கரும்பை பொங்கல் நாளில் மட்டும் சாப்பிடாமல் தினம் அதன் சாறை குடித்தால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் .இந்த பதிவில் கரும்பின் சாறு கொடுக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்
1.விலை மலிவான கரும்பு சாறில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது
2.விலை மலிவான கரும்பு சாறில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ் ஆகியவை உள்ளன.
3.கரும்பு சாறில் காணப்படும் இயற்கை சர்க்கரைகள் உடனடி ஆற்றல் ஊக்கத்தை வழங்கும்.
4.அடிக்கடி கரும்பு சாறு குடிப்பது உங்களை அதிக புத்துணர்வுடன் வைக்கும்.
5.மேலும் கரும்பு சாற்றில் செரிமானத்திற்கு உதவும் இயற்கை என்சைம்கள் உள்ளன.
6. கரும்பின் இயற்கை என்சைம்கள் மலச்சிக்கலைத் தடுக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
7.கரும்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் , நச்சுகள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து கல்லீரலை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும்.
8.கரும்பு சாறு கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
9.கரும்பு சாறு கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்,
10.கரும்பு சாறு குடிப்பது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது .
0 Comments