தானியங்கள் நமது ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாகும், ஏனெனில் பல்வேறு வகையான தானியங்களில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, இது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. அரிசியும் அத்தகைய தானியங்களில் ஒன்றாகும், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
தினமும் அரிசி சாதம் சாப்பிடுபவர்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். தினமும் அரிசி சாப்பிடுவதால், உடல்நலம் தொடர்பான பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. தினமும் அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தெரிந்துக் கொள்வது அவசியம் ஆகும்.
ஏனென்றால், நாம் உண்ணும் அரிசி வகைகளில் வெள்ளை அரிசியின் சுவையும் மணமும் மிக நன்றாக இருப்பதால் மக்கள் அதனை விரும்பி சாப்பிடுகிறார்கள். வீட்டில் சமைத்து சாப்பிடும் சாதம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது என்று நினைத்தால் அது தவறு.
அரிசியை தொடர்ந்து அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தினமும் அரிசி சாதம் உண்பவர்களின் உடலுக்கு தீங்கு ஏற்படுவதோடு, அவர்களுக்கு பல வகையான நோய்களும் ஏற்படுகின்றன. இந்த கட்டுரையில், தினமும் அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலக் கேடுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
எடை அதிகரிப்பு
வெள்ளை அரிசியில் சமைக்கப்பட்ட உணவை உண்பதால் உடல் எடை அதிகரிப்பது துரிதமாகும். அரிசியில் அதிக அளவு கலோரிகள் காணப்படுகின்றன, எனவே அதை தினசரி உண்பதும், அதிக அளவில் உண்பதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், அரிசி உணவை சாப்பிட்ட பிறகு, மீண்டும் விரைவாக பசியை உணர்கிறீர்கள், இதன் காரணமாக அதிகமாக சாப்பிடும் ஆபத்து அதிகரிக்கிறது.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பு
ஆய்வின்படி, வெள்ளை அரிசியை தினசரி உட்கொள்வதால் நேரடியாக அதிக கொலஸ்ட்ரால் ஏற்படாது. ஆனால் இதனை தினமும் உட்கொள்வது உடலில் ஏதேனும் ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும், இதன் காரணமாக உடலில் ட்ரைகிளிசரைடு அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. குறிப்பாக ஏற்கனவே அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், வெள்ளை அரிசியை உணவில் சேர்க்கும் முன் மருத்துவரிடம் பேச வேண்டும்.
நீரிழிவு ஆபத்து அதிகரிக்கும்
தினமும் அரிசியை உட்கொள்வது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிக அளவில் அதிகரிக்கிறது என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், அரிசி அதிக கிளைசெமிக் உணவு என்பதால், அதை அன்றாடம் சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் அபாயம் உள்ளது. மறுபுறம், ஏற்கனவே நீரிழிவு நோயாளிகள், தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால், இரத்த சர்க்கரை வேகமாக அதிகரிக்கும்.
இதய நோய் அதிகரிக்கும் ஆபத்து
இதய நிபுணர்களின் கூற்றுப்படி, வெள்ளை சர்க்கரை போல, வெள்ளை அரிசியும் இதயத்திற்கு எதிரி. குறிப்பாக தினமும் அரிசி சாப்பிடுபவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒருவருக்கு அல்லது அவரது குடும்பத்தினருக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே வெள்ளை அரிசியை உட்கொள்ள வேண்டும்.
வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்
தினசரி வெள்ளை அரிசி சாதத்தை உட்கொள்வது உங்கள் வளர்சிதை மாற்ற அமைப்பு உட்பட பல்வேறு வழிகளில் உடலை பாதிக்கிறது. தினசரி உணவில் அதிக அளவு அரிசியை சேர்த்துக் கொள்பவர்கள், வளர்சிதை மாற்ற நோய்க்குறியை உருவாக்கும் அபாயத்தில் இருப்பதாக சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
0 Comments