Ad Code

Responsive Advertisement

ராகுல் காந்திக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைப்பு- உச்சநீதிமன்றம் அதிரடி

 



குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது.

2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.

மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார்.


சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது.


இதையடுத்து, 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.


இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச 2 ஆண்டு சிறை தண்டனை குறித்த விளக்கம் இல்லை என கூறி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.


Post a Comment

1 Comments

  1. யாரவேனாலும் என்ன வேணாலும் பேசுவாரு இந்த ராகுல் சார். அப்புறம் கோர்ட்டுக்கு போய் தடை வாங்கிடுவாரு. எதுக்கு பேசணும் அப்புறம் எதுக்கு கோர்ட்டு படி ஏறி இறங்கணும்? முதிர்ச்சியற்ற நபர் இந்த ராகுல்.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement