துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், புதுக்குடியைச் சேர்ந்த செந்தில்நாதன், ஆதிகுமரகுருபரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முறுக்கு கடை நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு கடையில் இருந்த அவரை மூன்று வாலிபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து தப்பினர்.
செந்தில்நாதன் மகன் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். அவருடன் பயிலும் மாணவர்களுடன் கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பயின்ற போது, டியூஷன் வகுப்பில் ஏற்பட்ட தகராறில் முன் விரோதம் இருந்தது.
அந்த மாணவர்கள், அடிக்கடி செந்தில்நாதனை கொலை செய்வோம் என, மிரட்டி வந்தனர். இதுகுறித்து, ஊர் பெரியவர்கள் மூலம் பேச்சு நடந்தது.
நேற்று முன்தினம் கடைக்குள் புகுந்த அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர்கள், செந்தில்நாதனை கொலை செய்தனர். இரு மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
1 Comments
ஆசிரியர்களின் கைகளை கட்டிப்போட்டுவிட்டு ஆசிரியர்கள் கைகளால் அடி வாங்காத,
ReplyDeleteகுறும்பு செய்கின்ற, அடங்காத மாணவர்கள் போலீசின் கைகளில் அடிபடுவார்கள் என்பது உதாரணமாக நிகழ்ந்து விட்டது