Ad Code

Responsive Advertisement

ரஜினிகாந்தை பார்க்க வேண்டும் - நள்ளிரவு 1 மணிக்கு போயஸ் கார்டன் வந்த 10ம் வகுப்பு மாணவியால் பரபரப்பு

 

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் வசித்து வருகிறார். அவரது வீட்டின் முன்பு வழக்கம் போல் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.10 மணிக்கு தனியார் பாதுகாப்பு செக்யூரிட்டிகள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் கையில் பையுடன், ரஜினிகாந்த் வீட்டிற்கு முன்பு வந்து நின்றார். அவரிடம் செக்யூரிட்டிகள் விசாரித்தனர். அதற்கு அந்த சிறுமி, ‘நான் சேலத்தில் ரஜினிகாந்த் சாரை பார்க்க வந்து இருக்கிறேன்’ என்று கூறினார். 


அதைகேட்டு பணியில் இருந்து 2 செக்யூரிட்டிகள் ‘அய்யா வீட்டில் இல்லையே எப்படி பார்க்க முடியும்’ என்று கூறியுள்ளனர்’ அப்போது 15 வயது சிறுமி, ‘நான் சாரை பார்த்துவிட்டு தான் செல்லவே,சேலத்தில் இருந்து வந்து இருக்கிறேன்’ என்று கூறி உள்ளார்.


பின்னர், இதுகுறித்து செக்யூரிட்டிகள் தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். நான் 10ம் வகுப்பு படித்துவிட்டு தற்போது வீட்டில் உள்ளேன். 


ரஜினிகாந்த் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் நான், எங்கள் வீட்டில் ஆசிரியரை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு காலை 11 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னைக்கு பஸ்சில்் வந்தேன் என்று கூறி உள்ளார். அதைதொடர்ந்து விசாரணைக்கு போலீசார் சிறுமியை சென்னையில் உள்ள உறவினரான, பம்மலில் வசித்து வரும் சின்னபொண்ணு என்பவருடன் அனுப்பி வைத்தனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement