தமிழ்நாடு எங்களது சகோதர மாநிலம். அவர்களுடன் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது என கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்க கோரி ஒன்றிய அரசிடன் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து மேகதாது விவகாரம் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசுவதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (04-07-2023) டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கர்நாடக துணை முதல்வர்:
தமிழ்நாடு எங்களது சகோதர மாநிலம். அவர்களுடன் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது. தமிழர்கள் இங்கு வேலை செய்கின்றனர். கன்னடர்கள் அங்கு வேலை செய்கின்றனர். சந்தர்ப்பம் கிடைக்கும் போது பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்க வேண்டும் என அவர் கூறினார்.
0 Comments