அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், வீடு திரும்பினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவ மனைக்கு சென்றுவருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர்கள், தேவையான பரிசோதனைகளை செய்தனர்.
ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
0 Comments