Ad Code

Responsive Advertisement

கனமழை - 06.07.2023 விடுமுறை அறிவிக்கப்பட்டள்ள மாவட்டங்கள்

 




தொடர் மழை காரணமாக நீலகிரியில் 6 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


நீலகிரி மாவட்டம் - உதகை, கூடலூர், பந்தலூர், கூடலூர், குன்னூர், கோத்தகிரி ஆகிய 6 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


கோவை மாவட்டம் - வால்பாறை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார். 


இதேபோன்று, இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். 


கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 


தொடர் மழை காரணமாக மீட்புப் பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையின் இரு குழுக்கள் நீலகிரி மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை விரைந்தது.


நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement