அந்தக் கட்டுரை பணி ஓய்வு குறித்து சில ஆலோசனைகளை வழங்கி இருந்தது.
அதில் குறிப்பிட்ட எல்லா தகவல்களும் ஞாபகமில்லை முடிந்தவரையில் பட்டியலிடுகின்றேன்.
மனைவி இல்லத்தரசியாக இருந்தால் இதுவரை உங்களுக்கு வேலைக்கு செல்ல உதவி இருப்பார்கள் இனி அவர்களுக்கு சமையலறையில் உதவிகரமாக இருக்க வேண்டும்.
இதுநாள்வரை சம்பாதித்தால் எல்லோரும் என்னை மதித்தார்கள் ஓய்வு பெற்றப்பின் ஒருவரும் என்னை மதிப்பதில்லை என்று புகார் அளிக்க கூடாது.
ஓய்வு பெற்றபின் குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் அவரவர் வேலைகளில் வழக்கம் போல் ஈடுபடுவார்கள், யாரும் என்னை கவனிக்கவில்லை என்று புகார் கூற கூடாது.
அருகில் உள்ள நூலகத்திற்கு சென்று வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து புத்தகங்களை இரவல் எடுத்து அதிகம் வாசிக்கலாம்.
நேரத்தை பயனுள்ளதாக்க கழிப்பதற்காக செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம். தோட்டக்கலையில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு அதில் நேரத்தை பயனுள்ளதாக செலவிடலாம்.
மனதை அமைதியாக வைத்துக் கொள்ள யோகா, தியானம் போன்றவற்றை கற்றுக் கொள்ளலாம்.
வயோதிக காலத்தை பயனுள்ளதாக அமைத்துக் கொள்வதற்கு கோவில், குளம், மதம் தொடர்பான விடயங்களில் பங்கு பெறலாம்.
பேரன், பேத்தி மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் அதிகளவு நேரம் செலவழிக்கலாம்.
ஓய்வு பெற்ற சக வயது ஒத்த நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுடன் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.
மனதுக்கு மிகவும் பிடித்த ஏதாவது ஒன்றை புதிதாக கற்க தொடங்கலாம்.
முன்னரே குறிப்பிட்டது போல அச்சமயத்தில் நான் முதுகலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
அச்சமயத்தில், என்னுடைய எண்ணம் எப்படி இருந்தது என்றால் படித்து முடித்து வேலை செய்து ஓய்வு பெற்ற பின் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக கழிக்கலாம் என்று இருந்தது ஆனால் இந்தக் கட்டுரையைப் படித்ததும் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்தது.
ஓய்வு பெற்ற பிறகு ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதற்கு செய்ய வேண்டிய பெரிய பரிந்துரையை பார்த்து எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
அப்பொழுது எனக்குள் ஒரு மிகப்பெரிய கேள்வி எழுந்தது உண்மையில் வாழ்க்கையில் நாம் எதை செய்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று.
உண்மையில் என் வாழ்க்கையில் நான் ஆன்மீகப் பாதையை தேர்ந்தெடுப்பதற்கு மிக முக்கிய காரணியாக இருந்த ஒரு கட்டுரை என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.
என்னளவில் மேலே குறிப்பிட்ட கட்டுரையினால் பணி ஓய்வு குறித்தச் சில மகிழ்ச்சியான ஆச்சரியங்கள் அல்ல அதிர்ச்சியை அளித்தாலும் பின்னர் என் வாழ்க்கை பாதை ஆன்மீகம் தொடர்பாக அமைவதற்காக காரணியாக இருந்து, என் வாழ்க்கை மகிழ்ச்சியான ஆச்சரியங்கள் கொண்டதாக அமைவதற்கு உதவிகரமாக இருந்தது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அந்த கட்டுரையாளருக்கும் என் அறையில் தங்கியிருந்த வங்கி ஊழியர் அவர்களுக்கும், மகிழ்ச்சியான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
0 Comments