நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரிடன் ட்விட்டர் கணக்குகளை அரசு அளித்த புகார் கடித்ததின் பேரில் முடக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டரின் அந்த கடித்தத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அந்த கடிதத்தில்,"வெளிப்படைத்தன்மையின் நலனுக்காக, அதை உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் எழுதுகிறோம். @SeemanOfficial என்ற உங்கள் ட்விட்டர் கணக்கு குறித்து இந்திய அரசாங்கத்திடம் இருந்து ட்விட்டர் அதிகாரப்பூர்வ கடிதங்களைப் பெற்றுள்ளது. உங்கள் கணக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 விதியை மீறுவதாக உள்ளது என கடிதங்கள் கூறுகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் மட்டுமின்றி நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக், அக்கட்சியின் செய்திப்பிரிவு செயலாளர் பாக்கியராஜன், மற்றொரு நிர்வாகி விக்கி பார்கவ் உள்ளிட்டோரின் கணக்கும் இதேபோல் முடக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட ட்விட்டரின் கடிதத்தை தவிர, அக்கட்சியின் சார்பில் எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
0 Comments