வாட்ஸ்ஆப் பிங்க் மோசடி அண்மை நாள்களில் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் எச்சரிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
மும்பை, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பல இடங்களில், வாட்ஸ்ஆப் பிங்க் மோசடி தொடர்பான புகார்கள் வந்துள்ளன. எனவே, மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதாவது, தற்போதிருக்கும் வாட்ஸ்ஆப்பை விடவும் கூடுதலாக வசதிகளுடன் இந்த பிங்க் வாட்ஸ்ஆப் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அது உண்மை என நம்பி யாரேனும், அந்த வாட்ஸ்ஆப்பை பதிவிறக்கம் செய்துவிட்டால், அவ்வளவுதான், ஆன்ட்ராய்டு கைப்பேசியில் இருக்கும் அனைத்துத் தகவல்களும் திருடப்பட்டுவிடும் என்று எச்சரிக்கிறது காவல்துறை.
இதுபோன்ற புதிய வாட்ஸ்ஆப் வந்திருப்பதாக எங்கிருந்தோ எல்லாம் தகவல் வருவதில்லையாம். நண்பர்களிடமிருந்துதான். அதாவது இந்த வாட்ஸ்ஆப்பை பதிவிறக்கம் செய்து ஹேக் செய்யப்பட்டவர்களின் கைப்பேசியிலிருந்து அவர்களது கான்டாக்டுகளில் இருப்பவர்களுக்கு இந்த செய்தி பகிரப்படுகிறது.
உங்களுக்கு வரும் ஓடிபி உள்ளிட்ட அனைத்தையும் அதனால் திருட முடியும். அவ்வாறு விஷயம் தெரியாமல், பிங்க் வாட்ஸ்ஆப்பை பதிவிறக்கம் செய்துவிட்டால், அதன்பிறகு, அந்த கைப்பேசியின் அனைத்துக் கட்டுப்பாடுகளும் கைப்பேசியின் உரிமையாளரிடமிருந்து பறிபோய்விடும் என்பதே உண்மை. எனவே, மக்களே இதை மட்டும் செய்துவிடாதீர்கள்.
0 Comments