பலருடைய செல்போன் கேமராவின் பக்கத்திலும் ஒரு சிறிய அளவிலான ஓட்டை இருக்கும். இது எல்லோருடைய செல்போனிலும் இருப்பதில்லை.
ஆனால் தற்போது வரும் பெரும்பாலான செல்போன் மாடல்களில் இந்த ஓட்டை அமைந்துள்ளது. இந்த ஓட்டை எதற்காக கொடுக்கப்பட்டுள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒரு தகவலாகும்.
இந்த சிறிய ஓட்டைக்கும் ஃப்ளாஷ் லைட்டிர்க்கும், மற்றும் கேமராவுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இது ஒரு மினி மைக்ரோஃபோன் ஆகும். செல்போனின் இரைச்சல்களை பில்டர் செய்து நம் குரலை சரியாக பிக்கப் செய்து அடுத்த முனையில் கேட்பவர்களுக்கு தெளிவாக கொடுக்கக் கூடியது.
இது போன்ற சிறிய துளை இருக்கும் செல் ஃபோன்களில் இரைச்சல் மிகவும் குறைவாக இருக்கும். அத்துடன் எதிர் முனையில் பேசுபவர்களுக்கு இரைச்சல்கள் இல்லாமல் துல்லியமான குரலை கேட்கச் செய்யும்.
0 Comments