இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வரும் அக்டோபா் 5 முதல் நவம்பா் 19-ஆம் தேதி வரை ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் சென்னையில் 5 போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 10 மைதானங்களில் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.
முதல் போட்டி நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் அக்.5இல் அகமதாபாத்தில் நடக்கவிருக்கிறது.
முதல் அரையிறுதிப் போட்டி நவம்பர் 15இல் மும்பையிலும் 2வது அரையிறுதிப் போட்டி நவம்பர் 16இல் கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளன. நவ.19இல் அகமதாபாத்தில் உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் தலா ஒரு போட்டி விளையாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 8 அணிகள் தேர்வான நிலையில் தகுதிச் சுற்று தேர்வின் மூலம் மற்ற 2 அணிகளும் தேர்வாகும்.
இந்தியாவிற்கான போட்டி அட்டவணை:
அக்.8:ஆஸ்திரேலியா, இடம்: சென்னை
அக்.11: ஆப்கானிஸ்தான், இடம்: தில்லி
அக்.15: பாகிஸ்தா, இடம்:அகமதாபாத்
அக்.19: வங்கதேசம், இடம்: புணே
அக்.22: நியூசிலாந்து, இடம்: தர்மசாலா
அக்.29: இங்கிலாந்து, இடம்: லக்னௌ
நவ.2: குவாலிஃபையர் 1. இடம்: மும்பை
நவ.5: தென்னாப்பிரிக்கா, இடம்: கொல்கத்தா
நவ.11: குவாலிஃபையர் 2. இடம்: பெங்களூரு
0 Comments