Ad Code

Responsive Advertisement

திருமண தடையா? செய்ய வேண்டிய பரிகாரங்கள்..!!

 



திருமணம் கை கூடாமல் பல நேரங்களில் தேவையில்லாத மன உளைச்சல்கள் ஏற்படும். சில சமயங்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டும், வேறு சில காரணங்களால்  திருமணம் போகும். திருமணத்தில் உள்ள தடைகள் விரைவில் திருமணம் கை கூட, ஆண்களும் பெண்களும் சில பரிகாரங்களை செய்யலாம் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. இதை செய்தால், விரைவில்  நாதஸ்வரம் ஒலிக்க, திருமண பந்தத்தில் இணையலாம்.


விரைவில் திருமணம் கைகூட பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்:


திருமணம் ஆக வேண்டிய பெண்கள் மஞ்சள் நிற ஆடைகளை அதிகமாக அணிய வேண்டும். 


மேலும், கருப்பு மற்றும் அடர் நீல நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கவும்.


வியாழன் அன்று விரதம் இருந்து மஞ்சள் பொருட்களை தானம் செய்யுங்கள்.


உங்கள் அறையில் இளஞ்சிவப்பு நிற திரைச்சீலைகள் மற்றும் வால் பேப்பர்களை பயன்படுத்தவும்.


குங்குமப்பூவை உட்கொள்ளவும்.


வியாழன் தோறும் அரச மரத்தின் அடியில் நெய் தீபம் ஏற்றவும்.


விரைவில் திருமணம் கை கூட ஆண்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்:

 

ஆண்களுக்கு விரைவில் திருமணம் கைய கூட வெள்ளிக்கிழமை விரதம் இருக்க முடியும்.


வியாழன் அன்று குளிக்கும் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து குளிக்கவும். 


அதனால், குருவின் அருளால் விரைவில் திருமணம் நடக்கும்.


திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்கள், செவ்வாய்கிழமையன்று கோவிலுக்குச் சென்று வணங்க வேண்டும்.


அங்குள்ள சன்னதியில், பகவான் ராமர்-சீதையின் பாதத்தில் குங்குமத்தை  சமர்ப்பிக்க வேண்டும். 


21 செவ்வாய்கிழமை வரை இதைச் செய்யுங்கள், திருமண தடைகள் அனைத்தும் நீங்கி கஷ்டங்கள் விலகும்.


பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை ஆடைகளைப் பயன்படுத்துங்கள். 


அடர் நீல நிற ஆடைகளைத் தவிர்க்கவும்.


தவிர்க்க வேண்டிய விஷயங்கள்


விரைவில் திருமணம் கை கூட ஆண், பெண் இருவரும் தங்கள் அறை வீட்டின் தென்மேற்கில் இருக்கக் கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால், அவர்களின் திருமணத்திற்கு மிகப் பெரிய தடையாக அமைகிறது. அதுமட்டுமின்றி தெற்கு திசையில் உறங்குவதால் திருமணம் தாமதமாகும். அதே நேரத்தில், திருமணமாக வேண்டிய ஆன்கள், பெண்கள் அறைகள் காற்றோட்டமாக இருக்க வேண்டும், குப்பைகளை சேர்த்து வைக்கக்கூடாது. மேலும், சுவர்களின் வண்ணப்பூச்சு அடர் நிறங்களில் இருக்கக்கூடாது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement