Ad Code

Responsive Advertisement

கலைஞர் கருணாநிதியின் அதிசய வைக்கும் திறமைகள்!!!

 



கருணாநிதி அசாத்திய திறமை படைத்தவர்.  அவரது திறமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.  அவரது அன்றாடப் பணிகள், தனித்திறன்கள் பலவற்றை அறிவோம்.


* 2006 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து,  திமுக தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்ய வேலூர் கோட்டைக்கு வருகை தந்தார். அப்போது அவர் மேடைக்கு வந்தபோது, இரவு 9.55-ஐ தாண்டி விட்டது. சில நிமிடங்களேதான் இருந்தன. அப்போது, கருணாநிதி என்ன பேசுவார் என்று  ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தார். அவர், "இன்று வேலூர் கோட்டையில்.. நாளை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்..' என்று ஒரே வரியில் 2 நிமிடத்தில் பேசி, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.  இதன்பின்னர், 2008}இல் வேலூர் கோட்டையில் நடைபெற்ற வேலூர் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தும் விழாவில் பங்கேற்க முதல்வராக வந்த கருணாநிதி, இதை நினைவுப்படுத்தியும் காட்டினார்.


* தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி கருணாநிதி!  ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் எதிரணியில் தொடர்ந்தாலும் புகழ்க் கடலில் மூழ்கி,விமர்சன முத்துகளால் வெளியே வந்தவர் அவர்.  பொது வாழ்வில் தலைமுறைகள் தாண்டியும் வலம் வந்தவர்.


* டி.எம்.கருணாநிதி என்றுதான் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார். பின்னர், மு.க. இருப்பினும், அனைவராலும் அழைக்கப்படுவது கலைஞர் அல்லது தலைவர்.


* ஆண்டவரே' என்றுதான் எம்.ஜி.ஆர். இவரை அழைப்பார்.  பிற்காலத்தில் "ஷமூக்கா' என்றும் அழைத்திருக்கிறார்.


*தினமும் டைரி எழுதும் பழக்கம்கொண்டவர் அல்ல கருணாநிதி.  "என்னுடைய மூளையே எனக்கு ஒரு டைரி' என்பார் அவர்.


* உடல்நலம் பாதிக்கப்படும் வரை, அதிகாலையில் எழுந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று நடைப் பயிற்சி செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார் கருணாநிதி. முதுகு வலி ஆபரேஷனுக்குப் பிறகு வாக்கிங் நின்றுவிட்டது!


* கருணாநிதிக்குப் பிடித்தது  வேட்டிகள்.


*அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டவர். செரிமானத்தில் பிரச்னை இருந்தால், சைவ உணவை பெரும்பாலும் சாப்பிட்டார்.  கீரை கட்டாயம் இருக்க வேண்டும். மற்றபடி இட்லி, சாதம், சாம்பார் வகையறாக்கள் விருப்பமானவை. ஆற்காடு பிரியாணி கருணாநிதிக்கு ரொம்பவும் பிடிக்கும். 1990}களில் பல முறை பிரியாணி ஆற்காட்டில் இருந்து காரில் சென்னைக்கு பயணித்துள்ளது .


* 1960-களில் திமுக தேர்தல் செலவுக்கு யாரும் எதிர்பாராத வகையில் ரூ.11 லட்சம் வசூலித்துத் தந்தார்.


* சின்ன வயதில் ஆர்வமாக விளையாடியது ஹாக்கி.  கிரிக்கெட் பார்ப்பதில்தான் அதிக ஆர்வம்!.


* "வீரன் ஒருமுறைதான் சாவான். கோழை பலமுறை சாவான்' என்பது புகழ்பெற்ற பொன்மொழி. அதை கருணாநிதி,  "வீரன் சாவதே இல்லை.கோழை வாழ்வதே இல்லை' என்று மாற்றிப் பிரபலப்படுத்தினார்.


*ஆரம்பத்தில் மறவன் மடல் என்று எழுதி வந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பிறகுதான் "உடன்பிறப்பே' என்று தலைப்பிட்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார்.


* பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி போடுவது அவரது பாணி.  "ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறீர்களா?' என்று ஒரு முறை கேட்கப்பட்டது.  "அது பிரச்னை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா?' என்றுதான் பார்க்க வேண்டும்' என்று திருப்பி கேட்டார்.


* கோபாலபுரம் இல்லத்தில்,  மாடத்தில் கருணாநிதியின் அப்பா முத்துவேலர்,  தாய் அஞ்சுகம், முதல் மனைவி பத்மாவதி ஆகியோரின் படங்கள் இருக்கும்.  


* சிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள், திரைக்கதை, வசனங்கள், பாடல்கள், கார்ட்டூன் என எதையும் விட்டுவைத்ததில்லை கருணாநிதி.


* 'தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்' கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக்கூடாது,  "வீழ்வது நாமாக் இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்' - கருணாநிதி.  இவை அதிக முறை சொல்லப்பட்ட வாக்கியங்கள்!.


* 12 முறை எம்.எல்.ஏ.,  5 முறை முதல்வர், 10 முறை தி.மு.க. தலைவர், 1 முறை எம்.எல்.சி.  என்பது மாதிரியான சாதனை இதுவரை யாரும் செய்ததில்லை. இனியும் முடியுமா என்பது சந்தேகம்தான்!. எந்தத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவாதவர்.


* சிக்கலான நேரங்களிலும்  நள்ளிரவிலும் தலைமைச் செயலகத்தில் அமர்ந்திருப்பார்.


* படுக்கையில் உட்கார்ந்து பரீட்சை அட்டை வைத்து எழுதுவதுதான் அவரது வழக்கம். உயரத்துக்காக இரு தலையணைகள் உண்டு.


* மை பேனாவைத்தான் பயன்படுத்தினார்.


* கோபாலபுரம், சி.ஐ.டி. நகர், தலைமைச் செயலகம், அறிவாலயம், முரசொலி ஆகிய 5 இடங்களிலும் அன்றைய செய்தித்தாள்கள் கருணாநிதிக்காகவே காத்திருக்கும்.


* கடற்கரை மணலில் உட்கார்ந்து காற்று வாங்கியபடி பேசுவதுதான் கருணாநிதிக்குப் பிடிக்கும். அது முடியாததால், மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் கடலைப் பார்த்த அறையில் அடிக்கடி தங்கியுள்ளார். 2008 இல் ஒருமுறை ஜோலார்பேட்டை அருகேயுள்ள ஏலகிரி மலையில் சில நாள்கள் தங்கியிருந்ததும் உண்டு.


* கருணாநிதிக்குப் பிடித்த தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம், பிடித்த புராணம் மகாபாரதம். எப்போதும் மேஜையில் வைத்திருப்பது திருக்குறள்.


* தனிமை பிடிக்காது. எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருப்பது கருணாநிதிக்கு உண்டான குணம்.


* சாமானியனையும் முன்னணி தலைவராக்கும், அமைச்சராக்கும், மக்கள் பிரதிநிதியாக்கும் உள்ளாட்சி தலைவராக்கிய ஆக்கி கொண்டிருக்கும் இயக்கம் திமுக - ஜனநாயக இயக்கம் செயற்குழு பொறுப்பு கூட தேர்தலில் போட்டியிட்டே வர முடியும் என்று கருணாநிதி அவ்வப்போது சொல்வதுண்டு.


* வேட்புமனு செய்ய காசில்லாதவருக்கு கூட போட்டியிட வாய்ப்பு கொடுத்து வெற்றி பெற வைத்தவர் கருணாநிதி.  பண, படை பலம் படைத்தவர்களை கூட சாமானியவர்களை வேட்பாளர் ஆக்கி வெற்றி பெற வைத்தவர் கருணாநிதி.


* பச்சை தமிழன் காமராஜர் முதல்வராக நீடிக்க வேண்டும் என்பதற்காக, 1954 இல் குடியாத்தம் இடைத்தேர்தலில் கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பில் இருந்தபோதும், தமிழர் நலனுக்காக காமராஜரை ஆதரித்தவர் அண்ணா. குணாளா வா, குலக்கொழுந்தேவா என்று காமராஜரை பாராட்டியவர் அண்ணா. இதை அவ்வப்போது கருணாநிதி கூறுவதுண்டு.


*1962 இல் வேலூரில் நகராட்சி சேர்மன் (பிற்காலத்தில் எம்எல்ஏ) ஆன மா.பா.சாரதி ஏற்பாட்டில் வேலூர் கோட்டை முகப்பில் மகாத்மா காந்தி சிலையை அண்ணா திறந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு இடையே "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்றார் அண்ணா. இதையே கருணாநிதியும் அவ்வப்போது கோடிட்டு காட்டுவார்.


* அண்ணா, அவருக்குப்  கருணாநிதி, தற்போது மு.க.ஸ்டாலின் என்று 60 ஆண்டு கால தலைமையில் ஒரே சின்னம் உதயசூரியன்,  ஒரே கொடி கருப்பு சிவப்பு என்பதில் உலக சாதனை இயக்கம். பல்வேறு பிளவுகள் நேரிட்டபோதும், கட்சியைக் காப்பாற்றியவர் கருணாநிதி.


* அன்பில் தருமலிங்கம், அன்பில் பெரியசாமி, அன்பில் பொய்யாமொழி, மகேஸ் பொய்யாமொழி என்று மூன்று தலைமுறையினரோடு எம்எல்ஏவாக பணியாற்றியவர் கருணாநிதி.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement