Ad Code

Responsive Advertisement

ஆதார் - பான் இணைப்பு இன்றே கடைசி நாள்

 



வருமான வரி ஏய்ப்பை தடுப்பதற்காக, ஆதாருடன், பான் கார்டு எனப்படும், நிரந்தர வருமான வரிக்கணக்கு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது.


இறுதி வாய்ப்பாக, 2023 ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 1,000 ரூபாய் அபராதமாக செலுத்தி, இந்த தேதிக்குள் ஆதார் - பான் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு மேல் கால அவகாசம் அளிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.


இதன்படி ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் நாளை முதல் செயலற்றதாகிவிடும்.


ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு, டி.டி.எஸ்., பிடித்தம் மற்றும் செலுத்தும் விகிதம் அதிகரிக்கப்படும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.


வருமான வரித்துறையில் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் வட்டி ரத்து செய்யப்படும்.


ஆதார் - பான் இணைக்க விரும்புவோர், தங்களின் இணைப்பு நிலவரத்தை தெரிந்து கொள்ள விரும்புவோர், https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணைய தளத்தில் சென்று விபரங்களை அறியலாம்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement