கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடிகரும், தயாரிப்பாளருமான சி.மணிகண்டன் அந்த வீட்டை வாங்கியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது பெற்றோர் ரகுநாத பிச்சை-லஷ்மி.பள்ளிப் படிப்பை சென்னையில்முடித்த சுந்தர் பிச்சை, அசோக்நகரில் குடும்பத்துடன் வசித்துவந்தார்.
பின்னர், கரக்பூர் ஐஐடிமற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்து, 2004-ல் கூகுள் நிறுவனத்தில் இணைந்து, தற்போது கூகுள் நிறுவன சிஇஓ-வாகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
நடிகர் மணிகண்டன்: இந்நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டை, சுந்தர் பிச்சையின் தந்தை தற்போது விற்பனை செய்துள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான மணிகண்டன் அந்த வீட்டை வாங்கியுள்ளார். இவர் கதிர் என்ற பெயரில் ‘காந்தர்வன்’ படத்தில் நடித்தவர்.
மேலும், மணிகண்டன் என்ற தனது சொந்த பெயரில் ‘மீண்டும்’, ‘லெக்பீஸ்’ ஆகிய படங்களைத் தயாரித்து, நடித்து வருகிறார். சுந்தர் பிச்சை பெற்றோரின் பணிவு மற்றும் அணுகுமுறை பிரமிக்க வைத்ததாகக் கூறியுள்ள மணிகண்டன், பத்திரப் பதிவு அலுவலகத்தில் சில மணி நேரம் காத்திருந்து, தேவையான அனைத்து வரிகளையும் செலுத்தியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், சுந்தர் பிச்சையின் தந்தை முதன்முதலாக வாங்கியசொத்து இது என்பதால், ஆவணங்களை ஒப்படைக்கும்போது அவர் கண் கலங்கினார் என்றும் தெரிவித்துள்ளார்.
0 Comments