எல்லாருக்கும் ஒல்லியாக கச்சிதமான உடலமைப்பு இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக அவர்கள் நிறைய மெனக்கெடல்களையும் செய்வார்கள். ஒரு பார்ட்டி அல்லது நிகழ்ச்சிக்கு போவதாக இருந்தால் கூட உங்களை ஒல்லியாக காட்டும் உடைகளைத் தான் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பீர்கள்.
இப்படி நம்மளை ஒல்லியாக காட்டுவதில் உடைகள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நீங்கள் சாதாரணமாக அணியும் உடைகளைக் கூட சில ட்ரிக்ஸ்களை பயன்படுத்தி அணியும் போது ஒல்லியாக தெரிவீர்கள்.
உங்கள் உடலமைப்புக்கு ஏற்ற உடைகளை தேர்ந்தெடுத்து அணிவது, ஸ்பெஷலான உள்ளாடைகளை அணிவது போன்ற விஷயங்கள் உங்களை மிகவும் ஒல்லியாக காட்டும். அந்த வகையில் உங்களை ஒல்லியாக காட்ட எந்த மாதிரியான ஆடை டிப்ஸ்களை பின்பற்றலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
அடுக்கடுக்கான முறையில் உடையை அணியுங்கள்
ஒரு அழகான ஜீன்ஸ் மற்றும் மேலே ஒரு அழகான ஸ்லீவ்லெஸ் ஷர்ட் அணிந்து இடுப்பில் ஸ்டைலிஷாக துணியை கட்டுவது பெண்களிடையே பேஷனாகி வருகிறது. இப்படி அடுக்கான முறையில் உடைகளை அணிவது உங்களை ஒல்லியாக காட்டக் கூடும். மற்றவர் பார்வைக்கு நீங்கள் ஒல்லியாக இருப்பது போன்ற தோற்றத்தை பெறுவீர்கள்.
முடிந்த வரை கருப்பு நிற உடைகளை அணியுங்கள்
பொதுவாக எல்லாரும் அழ அழகான வண்ணங்களில் ஆடைகளை தேர்ந்தெடுப்பது உண்டு. ஆனால் உண்மையில் அடர்ந்த கருப்பு நிற ஆடைகள் உங்களை ஒல்லியாக காட்டும் என்கிறார்கள் ஆடை வடிவமைப்பு நிபுணர்கள். எனவே நீங்கள் ஒல்லியாக இருக்க விரும்பினால் கருப்பு நிற ஆடைகளை தேர்ந்தெடுங்கள்.
உடலோடு ஒட்டிய உள்ளாடைகளை அணியுங்கள்
ஷேப்வேர் உங்களுக்கு உடலோடு ஒட்டிய வடிவமைப்பை தருகிறது. இது உடலின் நடுப்பகுதி, இடுப்பு, தொடை பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்பை திறம்பட கட்டுப்படுத்த உதவுகிறது. உங்களை ஒல்லியாக காட்ட இந்த ஷேப்வேர் உதவுகிறது.
உயரமான ஜீன்ஸை அணியுங்கள்
உயரமான ஜீன்ஸை அணியும் போது நீங்கள் ஒல்லியான தோற்றத்தை பெறுவீர்கள். உயரமான ஜீன்ஸை அணியும் போது உங்கள் கால்கள் நீளமாக தெரியும். இது உங்களை ஒல்லியாக காட்டுகிறது.
பொருத்தமான உள்ளாடைகள் அவசியம்
உங்களுக்கு ஏற்ற உள்ளாடைகளை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். உங்கள் உள்ளாடைகள் நீட்டிக்க கூடிய வகையிலும் , மடிப்பை மறைப்பதற்கு உயரமானதாகவும் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் உள்ளாடைகளை தேர்ந்தெடுத்து அணிவது உங்களை ஒல்லியானதாக காட்டும்.
சரியான அணிகலன்களை அணியுங்கள்
நெக்லஸ், காதணிகள், ஸ்கார்ப் , பந்தனா, வாட்ச் போன்ற சரியான அணிகலன்களை தேர்ந்தெடுத்து அணிவது அவசியம். ஷேப்வேர்களை அணியும் போது இடுப்பில் பெல்ட்டுகளை அணியலாம். இது உங்கள் தோற்றத்தை ஒல்லியாக காட்டும்.
கோடுகள் மற்றும் வடிவங்கள் போடப்பட்ட ஆடைகள்
கிடைமட்ட கோடுகள் உள்ள ஆடைகள் உங்களை குட்டையானவராக காட்டும். எனவே முடிந்த வரை செங்குத்து கோடுகள் போட்ட ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியுங்கள். இது உங்களை ஒல்லியாக மற்றும் உயரமானவராக காட்டும்.
வித்தியாசமாக அணியுங்கள்
மேல் மற்றும் கீழே அணிவதற்கு பொருத்தமான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிவதற்கு பதிலாக வித்தியாசமான நிறம் மற்றும் வடிவமைப்பு கொண்ட ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியலாம். கருப்பு, நீலம் மற்றும் அடர்ந்த சாம்பல் நிறத்தை தேர்ந்தெடுத்து அணியலாம்.
தளர்வான சட்டையை அணிதல்
தளர்வான சட்டை அல்லது சட்டையை டக் செய்து அணிவது உங்களை ஒல்லியாக காட்டும். எனவே தளர்வான சட்டையை ஒரு பக்கம் மட்டும் டக் செய்து ஜீன்ஸ் அணிந்து செல்லலாம்.
உடல் தோரணை
உங்கள் உடல் தோரணையும் உங்களை ஒல்லியாக காட்டுவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே சரியான தோரணையில் செல்லுங்கள். முதுகை குணிந்த படி வைக்காதீர்கள். முதுகுப் பகுதி நேராக இருக்கும் படி நடந்து செல்வது உங்களை ஒல்லியாக காட்டும். ஒல்லியாக தெரிய உதவும் ஆடைகள் : செங்குத்தான கோடுகள் கொண்ட ஆடைகள், சிறிய அச்சிடப்பட்ட ஆடைகள், போல்கா புள்ளியிடப்பட்ட டாப்ஸ், டூனிக்ஸ் ஆடைகள் மற்றும் ஃப்ளூன்சி மேக்ஸி ஆடைகள் போன்றவை உங்களை ஒல்லியாகவும் உயரமானவராகவும் காட்டும்.
0 Comments