Ad Code

Responsive Advertisement

சிறுமியால் மிரண்டு கிடக்கும் ஒட்டுமொத்த மும்பை..!

 




சினிமாவில் வருவது போல சுவாரசியமான கதை: 


பேஷன் உலகை கலக்கி வரும் சிறுமி மலீஷா கார்வா, மும்பையில் உள்ள என்ற தாராவி பகுதியில்  தனது பெற்றவுடன் வாழ்ந்து வருகிறார். தாராவி என்றாலே மும்பை மக்களின் மனதில் தவறான ஒரு புரிதல் உள்ளது. அதனை மாற்றும் வகையில் சிறுமி மலீஷா கார்வா செயல்பட்டு வருகிறார். இவரின் கதையை பார்க்கும் போது சினிமாவில் வருவது போல சற்று சுவாரசியமாக இருக்கிறது. 


சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி மலீஷா கார்வாவின் குடும்பம் குஜராத்தில் இருந்து மும்பையின் தாராவி குடிசைப் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. கழிப்பறை இல்லாத குடிசை வீட்டில் தாய், தந்தை, தம்பியுடன் வாழ்ந்து வந்த மலீஷாவின் வாழ்வில் கடந்த 2020-ம் ஆண்டில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. 


9ஆம் வயது முதலே மாடலிங் செய்ய வேண்டும் என்ற ஆசை


சுமார் 9ஆம் வயது முதலே மாடலிங் செய்ய வேண்டும் என்பது இவரின் உயிர் மூச்சாக இருந்துள்ளது. மாடலிங் மீது உள்ள ஆர்வத்தால் கல்வியையும் தாண்டி மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்தார். 


மலீஷாவுக்கு பிரேக் கொடுத்த ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாஃப் மேன்  


இதற்காக  பல்வேறு உடைகள் உடுத்தி புகைப்படம் எடுத்து, அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். சிறுமி மலீஷா கார்வாவின் புகைப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு இருந்துள்ளது. அதனால் மும்பை முழுக்க இவர் பிரபலமானார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு மியூசிக் ஆல்பம் தொடர்பான படப்பிடிப்பிற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாஃப் மேன் மும்பைக்கு வருகை தந்திருந்தார். 


அப்போது சிறுமி மலீஷா கார்வா பற்றி அறிந்த நடிகர் ராபர்ட் ஹாப்மேன் மலீஷாவை சந்தித்தார். அந்த சிறுமியின் சரளமான ஆங்கில பேச்சு, துணிச்சல், நடன ஆர்வம் ஆகியவை ஹாப்மேனை கவர்ந்தது. அதோடு சிறுமியின் ஏழ்மை அவரது மனதை வெகுவாக பாதித்தது.


நடிகர் ராபர்ட் அவர்கள் மலீஷாவிற்கு தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி அதனை பிரமோஷன் செய்து கொடுத்துள்ளார். 


இணையதளம் வாயிலாக சிறுமிக்கு ரூ.15 லட்சம் நிதி திரட்ட ஹாப்மேன் முயற்சி செய்தார். இந்த முயற்சியில் இதுவரை ரூ.10.77 லட்சம் நிதி திரட்டப்பட்டு உள்ளது. மேலும் சிறுமியின் பெயரில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளை தொடங்கி, அவரின் நடன ஆர்வத்தை ஹாப்மேன் ஊக்குவித்தார்.


அப்போதிலிருந்து ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் மாடலிங் பற்றிய தனது சிந்தனைகளையும் ஆசைகளையும் அதில் வெளிப்படுத்தி வந்துள்ளார் மலீஷா. தற்போது வரை இவரை இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.


இது மட்டும் இன்றி இவரது புகைப்படங்களிலும் வீடியோக்களிலும், ‘Princess from the slum’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வந்திருந்தார். 'குடிசை இளவரசி' என்ற அடைமொழியுடன் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் பலரின் கவனத்தை ஈர்த்தார்.  இது மேலும் அவரை பிரபலமாக்கியது. FOREST ESSENTIALS என்ற நிறுவன தயாரிப்பில் தீ யுவதி என்ற விளம்பரத்தில் நடித்து மும்பையை கலக்கி வருகின்றார். இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் 115 பிரம்மாண்ட ஷோரூம்கள் உள்ளன. நட்சத்திர ஓட்டல்கள் உட்பட 190 பெரிய ஓட்டல்களுக்கு அந்த நிறுவன தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதோடு 120 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.


அண்மையில் அவர் நடித்த விளம்பரத்தை பார்த்து அவரே பரவசமான வீடியோ வெளிவந்து சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது.


குறும்படம் முதல் ஹாலிவுட் படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் 


ஒரு குறும்படத்திலும் அவர் திறமையாக நடித்தார். இதன்பலனாக அண்மையில் 2 ஹாலிவுட் படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இப்பொழுது பிரபல பாலிவுட் நடிகர்களுடன் பாலிவுட் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement