Ad Code

Responsive Advertisement

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்

 




தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பொறுப்பேற்கவுள்ளார்.


தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சரவையில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை வரும் 11-ம் தேதி காலை 10.30 மணிக்கு பதவியேற்க உள்ளது. புதிய அமைச்சருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 


முதல்வர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று புதிய அமைச்சரவைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மூத்த அமைச்சர் துரைமுருகன் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து, சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மூத்த அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன், "கவர்னர் மாளிகைக்குச் சென்றால் சொல்லிவிட்டுத்தான் செல்வேன். அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்குத் தெரியாது. அமைச்சரவை மாற்றங்களை பற்றி யாமறியோம் பராபரமே.


தனக்குக்கீழே பணி செய்வோரை மாற்றி புதிய அமைச்சர்களை நியமிக்க முதல்வருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அது நடக்குமா என்பது உங்களுக்கு தெரிந்த அளவுதான் எனக்கும் தெரியும். அமைச்சரவை மாற்றத்திற்கான தேவை இருக்கிறதா என முதல்வர் தான் தீர்மானிக்க வேண்டும். எந்த அமைச்சரும் தங்களது பொறுப்பு மாற்றப்படுமா என பதற்றத்தில் இல்லை. நிதி அமைச்சர் பொறுப்பு கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன். நான் துணை முதலமைச்சராக வந்தாலும் நல்லதுதான்.


தலைமைச் செயலகம் சென்றுவந்த பிறகு முதல்வரை சந்திக்க தொடர்பு கொண்டேன். ஆனால் முதல்வருக்கு கால் வலி என்பதால் ஓய்வு எடுப்பதாகக் கூறினர். புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடந்தால் கலந்துகொள்வேன். நான் 2 நாட்ளாக சென்னையில் இல்லை. ஒருநாள் சென்னையில் இல்லாவிட்டாலும் பாதி உலகம் தெரியமால் போய்விடுகிறது. முதல்வருடன் நான் வெளிநாடு செல்லவில்லை." என்று கூறியிருந்தார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement