பள்ளி மாணவர்கள் மது அருந்துவதற்கு தான் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் செய்யப்படுகிறது. பள்ளி மாணவர்கள் மதுபோதையில் ரகளை செய்வதற்கு தான் எப்படி பொறுப்பேற்க முடியும் முடியும். இந்த நிகழ்வுகளுக்கும் பொறுப்பில்லை என அமைச்சரான செந்தில் பாலாஜி எப்படி கூறமுடியும் என்று ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை வெளியிட நிர்மல்குமாருக்கு தடை விதிக்க கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிர்மல்குமார் ஆக்கப்பூர்வ விமர்சனங்களை முன்வைக்காமல் தனிப்பட்ட விமர்சனம் செய்கிறார் என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார். .
மாணவர்கள் பள்ளி சீருடையுடன் மது அருந்துவது அதிர்ச்சியைத் தருகிறது என ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஐகோர்ட் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ‘‘தமிழகத்தில் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் விபத்துகள், உயிரிழப்பு ஏற்படுகின்றது. எனவே, தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது என்றும், மதுவின் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு அறிந்திட செய்திடவும் உத்தரவிட வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுபான விலைப்பட்டியல் வைக்கவும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது குறித்து புகார் அளிப்பதற்கான தொடர்பு எண் உள்ளிட்ட விபர பலகையை கடைகளில் வைக்கவும், மதுவில் சேர்த்துள்ள பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட விபரங்களை தமிழில் தெரியப்படுத்தவும், விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் 8 மணி வரை மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
0 Comments