பெண்பயணியை தகாத வார்த்தைகளால் பேசியது, இலவச பயணச்சீட்டு வழங்காததால், நடத்துநர் ஒருவரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து போக்குவரத்து துறை மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், திருவொற்றியூர் பணிமனையை சேர்ந்த நடத்துநர் சிவசுதன் கடந்த 19ம் தேதி சென்ட்ரல் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய பெண் பயணிக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்காமல், தகாத வார்த்தைகளால் பேசியது தொடர்பான வீடியோ ஊடகங்களில் வெளியானது.
இந்நிலையில் நடத்துநர் சிவசுதன் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார். மேலும், பொதுமக்களுக்கு எந்த குறைவின்றி சேவை ஆற்றும் பணியில் மாநகர் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டு வருகிறது. எனவே, பொது மக்களிடம் மரியாதையுடனும், கண்ணியத்துடனும், பேசும்போது கவனத்துடன் ஓட்டுநரும், நடத்துநரும் நடந்து கொள்ள வேண்டும். கவனக்குறைவாக செயல்படும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments