நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு ரூபி (3), மரியாஆரோனிக்கா (8 மாத குழந்தை) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளது. இதில் மரியாஆரோனிக்காவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து குழந்தையை நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர் குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் குழந்தைக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி குழந்தை நேற்று உயிரிழந்தது.
0 Comments