மாண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, புகார்களை தெரிவிக்க 1913 என் உதவி எண்ணில் அழைக்கலாம் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்களின் அருகாமையில் நிற்பதை தவிர்க்க வேண்டும், புயல் எச்சரிக்கையால் பொதுமக்கள், மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி வலியுறுத்தியது
0 Comments