Ad Code

Responsive Advertisement

பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் - அமைச்சர் அறிக்கை

 



தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 'மாண்டஸ்' புயல் சின்னம் காரணமாக - கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு அலுவலர்கள் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அனைத்து துறை அலுவலர்கள் தலைமையிடத்தில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது


நேற்று (8-12-2022) 36 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 4.15 மி.மீ. ஆகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 26.66 மி.மீட்டரும், கன்னியாகுமரி மாவட்டத்தில்

குறைந்தபட்சமாக 0.05 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள மாவட்டங்கள் விபரம்


நாகப்பட்டினம், 26.66 மி.மீ மழையும், இராமநாதபுரம் 15.49 மி.மீ, செங்கல்பட்டு14.71 மி.மீ, சென்னை-13.75மி.மீ, திருவள்ளூர்-13.20மி.மீ, காஞ்சிபுரம்-13.10, திருவாரூர்-10.61 மி.மீ, பயிலாடுதுறை 10.22 மி.மீ மழையும் பெய்துள்ளது.


நேற்று (08.12.2022) தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த 'மாண்டஸ்' புயலானது மேலும் வலுவடைந்து கடும் புயலாக தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 270 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும், இது வலுவிழந்து புயலாக மாறக்கூடும் என்றும், மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்று ஸ்ரீஹரி கோட்டாவிற்கு இடையே 09.12.2022 அன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


* 09.12.2022


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர்,திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.


10-12-2022


திருவள்ளூர், சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.



* மீனவர்களுக்கான எச்சரிக்கை


தென்மேற்கு வங்கக் கடல், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


* கடல் அலைச் சீற்றம் குறித்த எச்சரிக்கை


* 9-12-2022 காலை 6.30 மணி முதல் 09-12-2022 இரவு 11.30 வரை கொளச்சல் முதல் கீழக்கரை வரை உள்ள கடலோர பகுதிகளில் 3.0 மீட்டர் முதல் 3.7 மீட்டர் வரை கடல் அலைகளின் உயரம் இருக்கும் என்றும்,

 9-12-2022 காலை 5.30 மணி முதல் 09-12-2022 இரவு 11.30 வரை வேதாரண்யம் முதல் பழவேர்காடு வரை உள்ள கடலோர பகுதிகளில் 3.5 மீட்டர் முதல் 5.2 மீட்டர் வரை கடல் அலைகளின் உயரம் இருக்கும் என்று இந்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, மீனவர் குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


* தரைக்காற்று குறித்த எச்சரிக்கை


09-12-2022 அன்று புயல் கரையைக் கடக்கும் போது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின் படி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் பேரில் கனமழையை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


*மாண்டஸ் புயல் சின்னம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் 8-12-2022 அன்று பல்வேறு துறை அலுவர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தி அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.


* கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் அவர்களது கடித எண். இஇ1 (4) / 558 / 2022, நாள்: 07.12.2022 -ன் படி அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


* வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து பொதுவான எச்சரிக்கை நடைமுறை (Common Alert Protocol) மூலம் குறுஞ்செய்திகள் வாயிலாக 58.47 லட்சம் நபர்களது செல்பேசிகளுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.


* புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் TNSMART செயலி மூலமாகவும், Twitter, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


* கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற 512 மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரைக்கு திரும்பியுள்ளன. மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள 459 படகுகள் பாதுகாப்பாக உள்ளன.


* தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 476 வீரர்கள் அடங்கிய 14 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதில் பாதிப்பிற்குள்ளாகும் என கருதப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.


* பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 882 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


* 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் அலுவலர்களுடன் இயங்குகின்றன. 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றது. கடலோரப் பகுதிகளில் 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு புயல் குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.


* பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள்


பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல் துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும். பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைக்கவும் போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும். பாதிப்பிற்குள்ளாகக்கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.  மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


அனைத்து துறை அலுவலர்களும் தலைமை இடத்தில் இருக்க வேண்டும். மின் கம்பங்கள், மின் கடத்திகள் ஆகியவற்றின் இருப்பு வைத்திருப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகும் மின் இணைப்புகளை சீரமைக்க குழுக்கள் அமைக்க வேண்டும். மணல் மூட்டைகள், கம்பங்கள், அவசரகாலத்தில் தேவையான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.


நிவாரண முகாம்களை தயாராக வைத்திருப்பதோடு, குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும், தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதற்கு போதுமான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும். பேரிடர் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களுக்கும், நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் சீரான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.


பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் உணவு அளிக்கும் வகையில் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உபரி நீர் வெளியேற்றும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும். நெடுஞ்சாலை, நீர் வள ஆதாரத்துறை, மின் வாரியம், தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை உள்ளிட்ட துறைகள் களப்பணியாற்ற தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


* பொதுமக்களுக்கான அறிவுரை/ செய்ய வேண்டியவை


ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க மாவட்ட நிருவாக அறிவுறுத்தும் போது, அதனை ஏற்று புயலின் தாக்கம் வரும் வரை காத்திராமல் நிவாரண முகாம்களில் முன்கூட்டியே தங்க வேண்டும்.


இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (முகநூல், டுவிட்டர்), TNSMART செயலி அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை வதந்திகளை நம்பக்கூடாது. மட்டுமே மூலம் பகிரப்படும் பின்பற்றுவதோடு அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும். கேஸ் கசிவு ஏற்படாதவாறு அணைத்து வைக்கவேண்டும. சிலிண்டரை பாதுகாப்பான முறையில் வீட்டை விட்டு வெளியேறும் போது ஜன்னல் மற்றும் வாசல் கதவுகள் சரியான முறையில் இருக முடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.


வீட்டின் மின் இணைப்பு மற்றும் சுவிட்சுகளை அணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முதியோர், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை தவறாமல் உடன் எடுத்து செல்ல வேண்டும்.மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு (torch light), தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries), மருத்துவ கட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.


*செய்யக் கூடாதவை


 9-12-2022 இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் தன்படம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.புயல் மற்றும் கன மழை நேரங்களில் பழைய கட்டடங்கள் மற்றும் மரங்களின் கீழே நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புயல் கடக்கும் நேரத்தில் கட்டங்களின் மொட்டை மாடிகளில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரைகளின்படி புயல் மற்றும் கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் கூறியுள்ளார்.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement