தமிழகத்தில் ஆரஞ்சு நிற ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்தநிலையில், ஆவின் நெய் விலை நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஆவின் நெய் வகைகளின் விலைகள் நேற்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 5 லிட்டர் நெய் பாட்டில் ரூ.2,900-ல் இருந்து ரூ.3,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.580-ல் இருந்து ரூ.630 ஆகவும் உயர்ந்து உள்ளது. அதாவது லிட்டருக்கு 50 ரூபாய் உயர்ந்து உள்ளது. மேலும் 500 மி.லி. நெய் ரூ.290-ல் இருந்து ரூ.315 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 200 மி.லி. நெய் ரூ.130-ல் இருந்து ரூ.145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70-ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்ந்துள்ளது. பிரீமியம் நெய் 1 லிட்டர் ரூ.630-ல் இருந்து ரூ.680 ஆகவும் பிரீமியம் நெய் 500 மி.லி. ரூ.340-ல் இருந்து ரூ.365 ஆகவும் உயர்ந்துள்ளது.
15 மி.லி. பாக்கெட் நெய் ரூ.12-ல் இருந்து ரூ.14 ஆகி உள்ளது. 100 மி.லி. பாக்கெட் நெய் ரூ.65-ல் இருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. 15 கிலோ நெய் டின் ரூ.9,680-ல் இருந்து ரூ.10,725 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 2வது முறையாக நெய் விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பால் நெய்யை தொடர்ந்து வெண்ணெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. 500 கிராம் சமையல் வெண்ணெய் விலை ரூ.250-லிருந்து ரூ.260 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராம் சமையல் வெண்ணெய் விலை ரூ.52-லிருந்து 55 ஆக உயர்த்தப்பட்டது.
0 Comments