சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் நவ. 27-ம் தேதி ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெற இருப்பதாகக் கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின. அத்தகைய கூட்டம் எதுவும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சார்பில் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. அதேநேரம் குறிப்பிட்ட நாளில் சம்பந்தப்பட்ட பள்ளியில் திட்டமிட்டபடி ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடத்தப்பட்டதாகவும், அதில் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி சர்ச்சையானது.
இதையடுத்து, விதிகளை மீறிச் செயல்பட்டதாகப் புகார் எழுந்ததால் சம்பந்தப்பட்ட பள்ளியிடம் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வாயிலாக பள்ளிக் கல்வித் துறை விளக்கம் கேட்டு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு தங்கள் பள்ளியில் அத்தகைய கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் பதில் வழங்கப்பட்டுள்ளதாகவும், தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments