முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசனுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இதயவியல் டாக்டர்கள் அவருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்தனர். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
0 Comments