தமிழக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஷம்பு கல்லோலிகர், விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பம் அளித்துள்ளார்.
தமிழக அரசின் சமூக நலத் துறை கூடுதல் தலைமைச் செயலராக இருப்பவர் ஷம்பு கல்லோலிகர். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த 1991ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார்.
மத்திய, மாநில அரசு பணிகளில், உயர் பதவிகளை வகித்தவர். அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ள நிலையில், பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற, அரசிடம் விண்ணப்பம் அளித்துள்ளார். அவரது விண்ணப்பம், அரசின் பரிசீலனையில் உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக, அவர் விருப்ப ஓய்வில் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஜக்மோகன்சிங் ராஜு, சந்தோஷ்பாபு, சகாயம், சந்தோஷ் கே மிஸ்ரா, விஜய் மாருதி பிங்ளே ஆகியோர் விருப்ப ஓய்வில் சென்றுள்ளனர்.
0 Comments