Ad Code

Responsive Advertisement

நடத்துநர்கள் ரூ.10 நாணயத்தை பெற மறுத்தால் நடவடிக்கை

 



சென்னை புறநகர் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரூ.10, ரூ.20 நாணயங்களை பேருந்து நடத்துநர்கள் பெறுவதில்லை என்ற புகார் உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


மத்திய அரசால் வெளியிடப்படும் ரூ.10, ரூ.20 மதிப்பிலான நாணயத்தை, பயணச்சீட்டு வாங்குவதற்காக நடத்துநரிடம் பயணிகள் அளிக்கும்போது, அதை நடத்துநர்கள் மறுக்காமல் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டு, உரிய பயணச்சீட்டை அவர்களுக்கு வழங்க வேண்டும்.


எக்காரணம் கொண்டும் அந்த நாணயங்களைவாங்க நடத்துநர்கள் மறுக்க கூடாது. இதுதொடர்பாக ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இத்தகைய புகார் ஏதும் எழாமல் பணிபுரிய அறிவுறுத்துமாறு அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement