Ad Code

Responsive Advertisement

எந்தெந்த உணவுப் பொருள்கள் விலை உயர்ந்துள்ளது தெரியுமா?

 



உளுந்து, மல்லி, மைதா விலை அதிகரித்தது. பாமாயில் ரூ.200, கடலை புண்ணாக்கு ரூ.300, கடந்த வாரத்தை விட விலை குறைந்தது. நல்லெண்ணெய், பொரிகடலை விலையில் மாற்றமில்லை.


இங்கு கடலை எண்ணெய் (15 கிலோ டின்) ரூ.2950, சன்பிளவர் எண்ணெய் ரூ.3300, பாமாயில் ரூ.200 குறைந்து 1500க்கும், 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.300 குறைந்து ரூ.4200க்கும், நல்லெண்ணெய் ரூ.5280க்கும் விற்கப்படுகிறது.


100 கிலோ சர்க்கரை ரூ.1920, 90 கிலோ பை மைதா ரூ.150 அதிகரித்து ரூ. 4200க்கும், கொண்டக்கடலை 100 கிலோ ரூ.200 குறைந்து 5200க்கு விற்கப்படுகிறது. 55 கிலோ பொரிகடலை விலையில் மாற்றமின்றி ரூ.4100க்கு விற்கப்படுகிறது.


100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.10,000, நயம் புதுசு லயன் ரூ.10,800, 100 கிலோ நாட்டு உளுந்து ரூ.6800, உளுந்து லயன் ரூ.7200, 100 கிலோ பாசிப்பயறு நாடு ரூ.6900, பாசிப்பயறு இந்தியா பருவட்டு ரூ.8500க்கு விற்கப்படுகிறது.


100 கிலோ மசூர் பருப்பு பருவட்டு ரூ.800 குறைந்து ரூ. 10,000, உருட்டு உளுந்து நாடு வகை ரூ.11,000, பர்மா வகை ரூ.9200, 100 கிலோ தொலி உளுந்தம் பருப்பு நாடு வகை ரூ.100 அதிகரித்து ரூ.9500, 100 கிலோ பாசிப்பருப்பு ரூ.100 அதிகரித்து ரூ.8800, பட்டாணி பருப்பு ரூ.6100, வெள்ளை பட்டாணி ரூ.6600க்கும் விற்கப்படுகிறது.


ஆந்திரா ஏ.சி., வத்தல் குவிண்டாலுக்கு ரூ.28,000 -- 28,500 விற்கப்படுகிறது. நாட்டு வத்தல், முண்டுவத்தல் வரத்து இல்லை. மல்லி நாடு 40 கிலோ ரூ.5000 முதல் 5200க்கு விற்கப்படுகிறது. மேலும் புதுவரவாக சங்கரன்கோவில், திருநெல்வேலி பகுதியில் இருந்து வாரத்தின் 4 நாட்களில் பூஸ்ட் ரக வத்தல் குவிண்டாலுக்கு ரூ. 23,000 -- 26,000 வரை விற்கப்படுகிறது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement