பங்குச்சந்தையில் நேற்று ஏற்பட்ட பெரும் சரிவால் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி, உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று உள்நாட்டுப் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதனால் அவரின் சொத்து மதிப்பு 6.91 பில்லியன் டாலர் மதிப்பில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
இதன் காரணமாக, உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு கௌதம் அதானி தள்ளப்பட்டுள்ளார். ஜெஃப் பெசோஸ் அவரை வீழ்த்தி தனது இழந்த இடத்தை மீண்டும் தக்கவைத்துக்கொண்டார். ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டு அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தை எலோன் மஸ்க் தக்க வைத்துள்ளார். ஆனாலும்,, ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலில் கௌதம் அதானி இரண்டாவது இடத்திலேயே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments