Ad Code

Responsive Advertisement

தாகத்தைத் தணிக்க உதவும் உணவு பொருட்கள்

 




👉 உடலில் நீர்ச்சத்தை சீரான அளவில் பராமரிக்க, தண்ணீர் அதிகம் குடிப்பதோடு, ஒரு சில உணவுப் பொருட்களையும் அதிகம் சாப்பிடலாம். இப்போது தாகத்தைத் தணிக்க உதவும் உணவு பொருட்களைப் பற்றி காண்போம்.


 ஆப்பிள் 

👉 தினமும் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று தான் ஆப்பிள். ஆப்பிளை கோடைக்காலத்தில் அதிகம் சாப்பிடுவதால், அடிக்கடி தாகம் எடுப்பதைத் தடுக்கலாம்.


 ப்ளம்ஸ் 

👉 கோடை வெயிலில் ஏற்படும் கடுமையான தாகத்தைப் போக்க ப்ளம்ஸ் பழம் அதிகம் உதவுகிறது. கோடையில் ப்ளம்ஸை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சி அடைவதை தடுக்கலாம்.


 பசலைக்கீரை 

👉 உணவில் அடிக்கடி பசலைக்கீரையை சேர்த்து கொண்டால் கோடை வெயிலில் தாகம் எடுக்காமல் பார்த்துக் கொள்ளலாம். இந்த கீரையை பைல்ஸ் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.


 மாம்பழம் 

👉 குளிர்ச்சி தன்மை கொண்டதோடு, தாகத்தையும் தணிக்கும் குணங்களை கொண்டது மாம்பழம் ஆகும். கோடையில் விலைக் குறைவாகக் கிடைக்கும் மாம்பழத்தை சாப்பிடுவதால் அடிக்கடி தாகம் எடுப்பதைத் தடுக்கலாம்.


 கிவி 

👉 கிவி பழம் புளிப்பாக இருந்தாலும், தாகத்தை எளிதில் தணிக்கும் என்பதால், உடல் வறட்சி அடையாமல் இருக்க கோடை காலத்தில் கிவி பழத்தை சாப்பிடலாம்.


 வாழைப்பழம் 

👉 விலை மலிவாக கிடைக்கும் பழங்களுள் ஒன்று வாழைப்பழம். வாழைப்பழத்தை கோடை காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சி அடைவதையும், தாகம் எடுப்பதையும் குறைக்கலாம்.


 இளநீர் 

👉 தண்ணீருக்கு அடுத்தப்படியாக தாகத்தைத் தணிக்க உதவும் பானங்களில் ஒன்று தான் இளநீர் ஆகும். இளநீர் உடலில் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடலுக்கு ஆற்றலையும் தந்து, உடல் வெப்பமடைவதைத் தடுக்கிறது.


 திராட்சை 

👉 கோடை காலத்தில் கருப்பு திராட்சையை சாப்பிடுவதால், நாக்கு வறட்சி அடைந்து, தாகம் அதிகம் எடுப்பதை தடுக்கிறது. திராட்சை மாதவிடாய் காலத்தில் உடல் வெப்பமடைவதை தடுத்து, வறட்டு இருமல் வருவதையும் தடுக்கிறது.


 வெள்ளரிக்காய் 

👉 கோடை காலத்தில் அதிக அளவில் கிடைக்கும் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து 90 சதவீதம் உள்ளது. கோடை காலத்தில் வெள்ளரிக்காயை ஒருவர் அதிகம் சாப்பிட்டு வந்தால், உடலின் வெப்பநிலை குறைந்து, உடல் குளிர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement