Ad Code

Responsive Advertisement

வாய் துர்நாற்றம் எப்படி தடுப்பது?

 




வாயில் துர்நாற்றம் வருவதற்கு காரணம் என்ன.?அதனை எப்படி தடுப்பது.?


வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் வாயில் துர்நாற்றம் ஏற்பட காரணம் மற்றும் அதனை எப்படி தடுப்பது என்று தெரிந்துகொள்வோம். நாம் என்ன தான் பல்லை தேய்த்து துலக்கினாலும் வாயில் இருந்து நாற்றம் வரும். வயிற்று புண் இருந்தாலும் துர்நாற்றம் ஏற்படும். ஆல்கஹால் மற்றும் புகை பிடிப்பவர்களுக்கும் துர்நாற்றம் ஏற்படும். மேலும் இதனை எப்படி தடுப்பது என்று தெரிந்துகொள்வோம்.


வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம்:

 வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு வயிற்றில் புண் இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். வயிற்றிலுள்ள அமிலம் உணவு குழாய்க்கு சென்றடைவதால் நெஞ்சு மற்றும் எரிச்சல் உண்டாகிறது. இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. உணவுப்பழக்கம் தவிர ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கத்தால் மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 


10 சதவீதம் பேருக்கு மற்ற உடல் பிரச்சனைகளான நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளால் வாய் துர்நாற்றம் வருகிறது.


வாய் துர்நாற்றம் வராமல் தடுப்பது எப்படி.?

 முதலில் பல்லை சுத்தமாக துலக்க வேண்டும். நாக்கில் இருக்கும் அழுகுக்குகளை சுத்த படுத்த வேண்டும். நாக்கில் கிருமிகள் இருக்கும். இதனால வாய் துர்நாற்றம் ஏற்படும். இரவு உணவு சாப்பிட்ட பிறகு 2 அல்லது 3 மணி நேரம் கழித்து தூங்க வேண்டும். 


 நீங்கள் சாப்பிடும் உணவுகளில் ஈசியாக செரிக்க கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற காரமான உணவுகள் வாய் துர்நாற்றத்திற்கு வழி வகுக்கும். இதனால் வாய் நாற்றம் ஏற்படும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். 


தண்ணீர் அதிகமாக குடிப்பதால் வாயை சுத்தம் செய்கிறது. இதனால் வாய் துர்நாற்றத்தை வராமல் பாதுகாக்கலாம். வாய் துர்நாற்றம் வரமால் இருப்பதற்கு புகை பிடிக்காமல் இருக்க வேண்டும். நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.


 சாப்பிடுவதற்கு முன்பு சோம்பு சிறிதளவு சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வராமல் தடுக்கலாம். சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு ஏலக்காய் சாப்பிட்டால் துர்நாற்றத்தை தடுக்கலாம். உங்களுக்கு ஏற்ற நேரத்தில் சிறிதளவு துளசி சாப்பிட்டாலும் வாய் துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement