Ad Code

Responsive Advertisement

திருமணத்திற்கு பிறகும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும்: மணப்பெண்ணிடம் ஒப்பந்த பத்திரத்தில் மாப்பிள்ளை நண்பர்கள் கையெழுத்து

 



மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கீழப்புதூரை சேர்ந்தவர் ஹரிபிரசாத். தேனி தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ளவர். இவர்களது கிரிக்கெட் அணியான சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹரிபிரசாத் உள்ளார். இவருக்கும், தேனியைச் சேர்ந்த பூஜாவுக்கும் நேற்று முன்தினம் உசிலம்பட்டியில் திருமணம் நடைபெற்றது. 


இந்த திருமணத்தின்போது பத்திரத்துடன் வந்த மணமகனின் நண்பர்கள், வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மணமகன் கிரிக்கெட் விளையாட மணமகள் சம்மதம் தெரிவிப்பது போன்று ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட வைத்தனர். திருமணத்திற்கு பின்னர் கணவரை விளையாட்டுகளில் கலந்து கொள்ள மனைவிமார்கள் சம்மதிப்பதில்லை. இதற்காகவே மணமகனின் நண்பர்களின் இந்த சம்மத ஒப்பந்த பத்திரம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement