தொடர் மழையால் வரத்து குறைந்த நிலையில், ஈரோட்டில் தக்காளி கிலோ ரூ.35-க்கு விற்பனையானது.
ஈரோடு வஉசி மைதானத்தில் செயல்படும் காய்கறி சந்தைக்கு தாளவாடி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், பெங்களூரு மற்றும் கர்நாடகா, ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வரும். நாள்தோறும் 8 ஆயிரம் பெட்டி தக்காளி (ஒரு பெட்டி 30 கிலோ) விற்பனைக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால், தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. திருமண முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், தக்காளியின் விலை உயர தொடங்கியுள்ளது.
ஈரோடு காய்கறி சந்தைக்கு நேற்று 5 ஆயிரம் பெட்டி தக்காளி விற்பனைக்கு வந்த நிலையில், கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையான நிலையில் இருமடங்கு விலை உயர்ந்து ரூ.35-க்கு விற்பனையானது.“தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீடிப்பதால், தக்காளி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தொடர்ந்து வரத்து குறைவாகவே இருக்கும். எனவே, வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது” என வியாபாரிகள் தெரிவித்தனர்.
0 Comments