Ad Code

Responsive Advertisement

காய்கறிகள் விலை உயர்வு ஒரு கிலோ கேரட் விலை ரூ.95 - ஆட்டம் காட்டும் தக்காளி

 



மழை மற்றும் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. இவ்விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, திண்டுக்கல், ஓசூர், ஒட்டன்சத்திரம், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 80 முதல் 90 வாகனங்களில் 1,200 டன் தக்காளி  வருகிறது. 


தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. தற்போது 36 வாகனங்களில் 500 டன் தக்காளி மட்டுமே வருகிறது. இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.45க்கும், பெங்களூரு தக்காளி 50க்கும் விற்கப்பட்டது. நேற்று காலை நாட்டு தக்காளி ரூ.50க்கும், பெங்களூரு தக்காளி ரூ.60க்கும் விற்கப்பட்டது.


அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.60க்கும், பெங்களூரு தக்காளி ரூ.70க்கும் விற்கப்படுகிறது. உதகையில் தற்போது கடும் மழை பெய்து வருகிறது. இதனால் கேரட் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ கேரட் ரூ.95க்கும் விற்கப்பட்டது. 


சென்னை மற்றும் புறநகர் கடைகளில் கேரட் ஒரு கிலோ கேரட் ரூ.100க்கு விற்கப்பட்டது. இதுகுறித்து, கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்எஸ்.முத்துகுமார் கூறுகையில், மழை மற்றும் வரத்து குறைவால் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.50க்கும், பெங்களுரு தக்காளி 60க்கும் விற்கப்பட்டது. உதகையில்,  மழை பெய்து வருவதால் ஒரு கிலோ கேரட் ரூ.95க்கு விற்கப்படுகிறது. மழை காரணமாக நேற்று காலை 800 மூட்டை கேரட் வந்ததால் விலை அதிகரித்துள்ளது.’’ என்றார்.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement