நம் முன்னோர்கள் பலவிதமான பழமொழிகளை உருவாக்கி வைத்துச் சென்றுள்ளனர். பல நேரங்களில் அவை மூட நம்பிக்கைகளாக தெரிகிறது.
ஆனால் உண்மையில் இந்த மூட நம்பிக்கைகளுக்கு பின் அறிவியல் இருப்பதை நாம் உணரமுடியும். உதாரணமாக இரவு நேரத்தில் நகம் வெட்ட கூடாது. என்று கூறுவார்கள் வெளிச்சம் இல்லாத காலத்தில் இரவு நேரத்தில் நகம் வெட்டினால் அதை வீட்டிற்குள் சிதறி பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் கூறப்பட்ட பழமொழி அது.
அதுபோல முருங்கை மரத்தை வீட்டிற்கு முன் வைக்கக் கூடாது என்று கூறுவார்கள். அதற்கு காரணம் என்னவென்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முருங்கை மரத்தில் கிளைகள் மெல்லியதாக இருக்கும். எனவே குழந்தைகள் அதில் ஏறி விளையாடினார்கள் என்றால் கீழே விழுந்து விடுவார்கள் என்பதை தவிர்க்கவும், முருங்கை மரத்தில் கம்பளி பூச்சி இருப்பதால் வீட்டிற்கு முன் வைத்தால் வீட்டிற்குள் பூச்சி வந்துவிடும் என்பதை தவிர்ப்பதற்காகவும் வீட்டிற்கு முன் முருங்கை மரத்தை வைக்கக்கூடாது என்பார்கள்.
0 Comments