தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் மட்டும் 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த சில நாட்களில் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த புயல் சின்னம் ஆந்திரா வடக்கு கடலோர பகுதியிலும், ஒடிசா புவனேஸ்வர் துறைமுகத்தில் இருந்து வடமேற்கில் 100 கி.மீயில் மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது..
புயல் - வங்கக்கடல்
வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக, தமிழக கடலோர மாவட்டத்தில் சூறாவளி காற்று வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என்று ஏற்கனவே வானிலை மையம் தெரிவித்திருந்தது.. இதனிடையே, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.. இந்த மழைப்பொழிவு தொடரும் என்று அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அந்தவகையில், இன்றும்கூட அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் மட்டும் 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
காரைக்கால்
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆக.11 முதல் 14ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, குமரி, மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சூறாவளி
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். ஆந்திர கடலோரப் பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடலில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளதால், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கரையோரம், தென் மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீசும். லட்சத்தீவு, வட கேரளா, கர்நாடகா கடலிற பகுதி, தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும். இன்றைய தினம் ஆந்திர கடலோரப் பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடலில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது.
வார்னிங் - மீனவர்கள்
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீசும். கர்நாடக கடலோரம், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. நாளை அதாவது ஆகஸ்ட் 12-ல் ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது.. கர்நாடகத்தின் கடலோரம், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். 40 - 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு 3 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments