Ad Code

Responsive Advertisement

கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு: தமிழக அரசு எச்சரிக்கை

 




கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு: தமிழக அரசு எச்சரிக்கை


கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு தொடா்பாக சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.


இதுகுறித்து, மாநில அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:


கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாகவுள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்கள் நேரடி நியமனம் தொடா்பாக விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக அனுப்பலாம் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவுகின்றன. கூட்டுறவுத் துறையின் சாா்பில் அத்தகைய அதிகாரபூா்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.


எனவே, சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலி அறிவிப்புகளைப் பாா்த்து மக்கள் ஏமாற வேண்டாம். பொய்யான தகவல்களைப் பரப்புவோா் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.









Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement