Ad Code

Responsive Advertisement

தந்தை சடலத்தை வணங்கிவிட்டு எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய மாணவி

 




கடலூர் அருகே சாவடி ஞானாம்பாள் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். இவரது மகள் அவந்திகா (15). தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு நடந்து வருவதால், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 தேர்வுகளை அவந்திகா எழுதியிருந்தார். 


இந்நிலையில், சில நாட்களுக்கு முன், ஒரு திருமண நிகழ்ச்சியில், வீடியோ எடுத்துக் கொண்டிருந்த சிவகுமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் சிவக்குமார் இறந்தார். அவரது உடல் நேற்று வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது. இந்நிலையில் நேற்று கணக்கு தேர்வை, அவந்திகா தந்தையின் சடலத்தை வணங்கிவிட்டு, கண்ணீருடன் சென்று எழுதினார். அவருக்கு சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆறுதல் கூறினர். தேர்வு முடிந்து வந்ததும் தந்தையின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement