Ad Code

Responsive Advertisement

பட்டதாரி இளைஞர் தொடங்கிய கழுதைப் பண்ணை - மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

 




நெல்லை மாவட்டம், முக்கூடல் பகுதிக்கு அருகில் உள்ள துலுக்கபட்டி கிராமத்தில் பட்டதாரி இளைஞர் ஒருவர், தமிழகத்தில் முதல் முறையாக கழுதைப்பால் பண்ணையை தொடங்கியுள்ளார். இதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.


பின்னர் அவர் பேசியதாவது: அழிவு நிலையில் உள்ள இந்த கழுதை இனத்தை பாதுகாத்திட கடந்த 10 ஆண்டுகளில் 62 சதவீதம்  உள்ளதாகவும், நாட்டில் தற்போது 1 லடசத்து 40 ஆயிரம் கழுதைகளும், தமிழகத்தில் 1428 கழுதைகள் மட்டுமே  உள்ளது. 


கழுதைப் பால் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதாகவும், இந்த கழுதைப் பால் தாய் பாலுக்கு நிகராக செயல்படுவதுடன், மனித எச்சில் உள்ள லைசை சைன் என்ற ரசாயனம் கழுதைப் பாலில் உள்ளதால் இது ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்டதாக விளங்குகிறது.


தாய்ப்பாலுக்கு இணையான சக்தி கொண்ட இந்த கழுதைப் பாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் இதனை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் கழுதைப் பாலின் விலை ரூ. 7 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவதால், இந்த தொழில் பெரும் வளர்ச்சி அடையும் என்று  நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement