Ad Code

Responsive Advertisement

சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்வு

 




வீட்டு உபயோகம் மற்றும் வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் விலையனாது, ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சா்வதே சந்தையில் எரிசக்தி விலை உயா்வு அடிப்படையில், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ. 1,015.50க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 3 அதிகரித்துள்ளது. மேலும், ரூ. 2,499க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ. 8 உயர்த்தப்பட்டு ரூ. 2,507க்கு விற்பனை செய்யப்படுகிறது.


முன்னதாக, மார்ச் மாதம் ரூ. 50-ம், மே 7ஆம் தேதி ரூ. 50-ம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே, பல நகரங்களில் சமையல் எரிவாயுக்கான மானியத்தை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை என்று புகாா் கூறப்படுகிறது. அதன் காரணமாக, அதிகம் பேசப்பட்ட மத்திய அரசின் உஜ்வலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற ஏழைப் பெண்கள் உள்பட அனைத்து நுகா்வோரும் மானியம் அல்லாத அல்லது சந்தை விலையில் சமையல் எரிவாயு சிலிண்டா் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement