தமிழக அரசின் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இதுவரை 79 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியாா் நிறுவனங்களின் பங்களிப்புடன், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையானது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஜூனில் தொடங்கப்பட்டு இப்போது வரை 57 மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 58-வது முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம்களுக்கு இடையே 549 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பால் 79 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
0 Comments