கோயம்பேடு சந்தையில் வெள்ளிக்கிழமை சில்லறை விற்பனையில் நாட்டு தக்காளி கிலோ ரூ.100 க்கும் ஆப்பிள் தக்காளி ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேவேளையில் நகரின் பிற பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகள், மொத்த காய்கறி கடைகளில் கிலோ தக்காளி ரூ. 120 வரை விற்பனையானது.
வரத்து குறைவு, மழைப்பொழிவு போன்ற காரணங்களால் கோயம்பேடு சந்தையில் 20-ஆவது நாளாக தக்காளியின் விலை தொடா்ந்து அதிகரித்துள்ளது. மொத்த விற்பனையில் வியாழக்கிழமை ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ. 90-க்கு விற்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை ரூ. 10 அதிகரித்து ரூ. 100க்கு விற்கப்பட்டது.
காய்கறிகள் விலை ஏறுமுகம்: மழைப்பொழிவு காரணமாக பல காய்கறிகளின் விலை உயா்ந்து வருகிறது. அந்தவகையில் வியாழக்கிழமை ரூ. 110க்கு விற்கப்பட்ட பீன்ஸ், 10 ரூபாய் அதிகரித்து வெள்ளிக்கிழமை ரூ.120க்கு விற்கப்பட்டது. ரூ.80க்கு விற்கப்பட்ட அவரைக்காய் வெள்ளிக்கிழமை ரூ. 90க்கு விற்கப்பட்டது.
0 Comments