சென்னை மந்தைவெளி நாராயண் செட்டி சந்தை சேர்ந்தவர் சுகுமார்(62). இவருக்கு பானுமதி என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர். பானுமதி கடந்த 2002ம் ஆண்டு இறந்ததால், இரு மகன்களை பார்த்து கொள்ள இரண்டாவதாக மோகனா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். மோகனாவுக்கு யாம்நாத் என்ற மகன் பிறந்தார். தற்போது யாம்நாத்(15) மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்ல யாம்நாத் காலை 8 மணிக்கு வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்றுள்ளார். ஹீட்டரில் தண்ணீர் கொதித்து விட்டதா என பக்கெட்டில் உள்ள தண்ணீரில் யாமநாத் கையை விட்டுள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து யாமநாத் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments