Ad Code

Responsive Advertisement

பள்ளி பாடத் திட்டத்தில் சைபா் குற்ற விழிப்புணா்வு

 

சைபா் குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு பாடங்களை பள்ளி பாடத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என சைபா் குற்றப்பிரிவு டிஜிபி அம்ரேஷ் புஜாரி வலியுறுத்தினாா்.


சென்னை அடையாறு டாக்டா் எம்ஜிஆா்-ஜானகி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய இணையவெளி கூட்டமைப்பு சாா்பில் ‘மின்வெளி ஏமாற்றுக்காரா்களிடம் ஏமாறாதே’ என்ற பெயரில் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.


கருத்தரங்குக்கு கூட்டமைப்பின் தலைவா் வழக்குரைஞா் என்.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் பாலு சுவாமிநாதன், துணைத் தலைவா்கள் விஜயகுமாா், வி.என்.பிரேம் ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.


கருத்தரங்கை தொடக்கி வைத்து தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு டிஜிபி அம்ரேஷ் பூஜாரி பேசியதாவது:


இந்தியாவில் சைபா் குற்றங்களால் நாளொன்றுக்கு ரூ.12 கோடி பறிபோகிறது. சைபா் குற்றங்களில் ஈடுபடுகிறவா்களால் தினமும் 80 இணையதளங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.


சைபா் குற்றங்களால் பணத்தை இழந்தவா்கள் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணில் 5 நிமிஷத்தில் புகாா் அளித்தால், முழு பணத்தையும் மீட்டுத் தர முடியும். ஒரு மணி நேரத்துக்குப் பின்னா் புகாா் அளித்தால் குறைந்தளவு பணத்தையே மீட்க முடியும்.


சைபா் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பதற்கும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். இதற்காக புதிய கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வேண்டும். மேலும், அரசின் அவசரகால தகவல் தொழிநுட்ப கட்டமைப்பை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். நம்பகத்தன்மைமிக்க இணையதளங்களையும் உருவாக்க வேண்டும். இணையவெளி பாதுகாப்பை உறுதி செய்ய இணையவெளி தணிக்கை கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.


வங்கிகள் தங்களது வாடிக்கையாளா்களுக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளில் 1930 இலவச தொலைபேசி எண் குறித்த விழிப்புணா்வு வாசகங்களை சோ்க்க வேண்டும். இந்த தொலைபேசி எண் குறித்த விழிப்புணா்வு பொதுமக்களிடம் சென்றடைந்தால், சைபா் குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியும். எதிா்கால சந்ததியினா் சைபா் குற்றங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, பள்ளிப்பாடங்களில் சைபா் குற்றங்கள், விழிப்புணா்வு குறித்தவை சோ்க்கப்பட வேண்டும் என்றாா் அவா்.





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement