தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மாா்ச் 24-ஆம் தேதி முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை ஆகிய 3 நாள்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் செவ்வாய்க்கிழமை கூறியது:
வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (மாா்ச் 23) இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மாா்ச் 24 முதல் 26 வரை: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மாா்ச் 24-ஆம் தேதி முதல் மாா்ச் 26 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை உயரும்: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையில்... சென்னையைப் பொருத்தவரை புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
0 Comments