Ad Code

Responsive Advertisement

இட்லி கடை நடத்தும் பெண் - அரசுப்பள்ளியில் படித்து மகனுக்கு MBBS சீட்

 


ஆரணியில் இட்லி கடை நடத்தி வரும் பெண்ணின் மகனுக்கு 7.5 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவ சீட் கிடைத்துள்ளது. பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சி பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ். ஆட்டோ டிரைவர். இவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சரளா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில், மகன் பரத் ஆரணியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து 467 மதிப்பெண்கள் பெற்றான்.  


இந்நிலையில், மாணவன் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு எழுதியதில் 279 மதிப்பெண் பெற்றுள்ளான். இதில், தமிழக அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி நீலகிரி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை கிடைத்துள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் பரத்தை பள்ளியின் தலைமையாசிரியர் உள்ளிட்ட சக ஆசிரியர்கள் பாராட்டினர். மேலும், மாணவன் பரத்தின் தாய் சரளா ஆரணியில் இட்லி கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement