Ad Code

Responsive Advertisement

புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை

 




சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.864 உயர்ந்து ரூ.38,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


ரஷியா-உக்ரைன் போா் பதற்றம் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. இடையில் ஓரிரு நாள்கள் விலை சற்று குறைந்தாலும், கடந்த செவ்வாய்க்கிழமை ரூ.38 ஆயிரத்தைத் தாண்டியது. புதன்கிழமை சற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. 


இனிவரும் நாள்களில் புதிய உச்சத்தைத்தொடும் என்று தங்கம் மற்றும் வைர நகை வர்த்தகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரன் ரூ.38,616 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.108 உயர்ந்து ரூ.4,827-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.90 உயர்ந்து ரூ.70.60 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1900 உயர்ந்து ரூ.70,600 ஆகவும் உள்ளது.


வியாழக்கிழமை விலை நிலவரம்


1 கிராம் தங்கம்............................. 4,827

1 சவரன் தங்கம்............................... 38,616

1 கிராம் வெள்ளி............................. 70.60

1 கிலோ வெள்ளி.............................70,600


புதன்கிழமை விலை நிலவரம்


1 கிராம் தங்கம்............................. 4,719

1 சவரன் தங்கம்............................... 37,752

1 கிராம் வெள்ளி............................. 68.70

1 கிலோ வெள்ளி.............................68,700



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement